பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
முதற் பக்கம் பிரிவு விஞ்ஞானம் புவிச்சரிதவியல் பிரிவு

புவிச்சரிதவியல் பிரிவு


புவியியல் பிரிவானது 1877 ம் ஆண்டு கொழும்பு தேசிய நூதனசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப் பிரிவானது குறிப்பிடத்தக்களவு புவியியல் மற்றும் வரலாற்றுக்கு முந்திய மாதிரிகளை பேணிப் பராமரித்து வருகின்றது.

புவியியல் மாதிரிகளின் தொகுப்பு

கனிமங்களும் பாறைகளும்

இத்தொகுப்பானது இலங்கையில் காணப்பட்ட ஏறக்குறைய ஒவ்வொரு கனிமங்கள் மற்றும் பாறை வகைகளை பிரதிபலிக்கின்றது.

உயிர்ச் சுவடுகள்
உயிர்ச் சுவடுகளின் சேகரிப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயிர்ச் சுவடுகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட ஒவ்வொரு உள்ளூர் உயிர்ச் சுவடுகளும் இலங்கையில் காணப்பட்டதுடன், பிளிஸ்ரோஸின், யுராசிக், மற்றும் மயோசீன் யுகங்களிற்கு சொந்தமானது.

வரலாற்றுக்கு முற்பட்ட மாதிரிகளின் சேகரிப்பு
இச் சேகரிப்பானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வரலாற்றுக்கு முற்பட்ட மாதிரிகளின் சேகரிப்புக்களைக் கொண்டுள்ளது. உள்நாட்டு வரலாற்றுக்கு முற்பட்ட மாதிரிகளின் சேகரிப்பானது இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட பத்து இடங்களிலிருந்து பெறப்பட்ட ஆயுதங்களுடன் கூடிய மனித என்புகளின் எச்சங்கள் மற்றும் கலைப்பொருட்களை கொண்டவையாகும்.

புவியியல் பிரிவின் மூலம் வழங்கப்படும் சேவைகள்

  • உள்ளூர் மற்றும் வெளியூர் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் புவியியலுடன் தொடர்புடைய பொதுமக்கள் ஆகியோருக்கு அறிவியல் தரவுகள் மற்றும் தகவல்களை வழங்குதல்.
  • புவியியல் மற்றும் வரலாற்றுக்கு முந்திய மாதிரிகள் தொடர்பான நிலையான மற்றும் நடமாடும் கண்காட்சிகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊக்குவித்தல்.
  • புவியியல் மற்றும் வரலாற்றுக்கு முந்திய மாதிரிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன.
    • புவியியல் பிரிவின் மாதிரிப்பொருளை கையுறை, மாஸ்க் மற்றும் கைவில்லை ஆகியவற்றின் மூலமே கையாளப்பட வேண்டியது அவசியமாகும்.
    • ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான கையுறை, மாஸ்க், கைவில்லை மற்றும் பென்சில்கள் புவியியல் பிரிவிலிருந்து வழங்கப்பட மாட்டாது.
    • மாதிரிப்பொருளை கையாள பயன்படுத்தப்படும் தட்டம் வழங்கப்படும்.
    • மாதிரிப்பொருளை நகர்த்துவது மற்றும் தொட்டுணர்வது குறைக்கப்பட்டுள்ளது.
    • உணவு மற்றும் கைத்தொலைபேசிகள் ஆய்வுப்பகுதியினுள் அனுமதிக்கப்பட மாட்டாது.

அவதானத்திற்கு:
பெயர் : திரு வஜித் அபேசிங்க
பதவி : புவிச்சரிதவியல் பாதுகாப்பாளர்
தொலைபேசி இல. : 0094112691399
மின் அஞ்ஞல் : geology-dnm@gmail.com


pic
pic
pic
pic
pic
pic
Image Gallery : புவிச்சரிதவியல் பிரிவு